திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகாவில், தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்ற ஆல்வா எடிசன் (27) நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் மோதி தலையில் பலத்த காயமடைந்துள்ளார். வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (மே 15) காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.