திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெரியார் நகரைச் சேர்ந்த 18 வயது ரூபன், சென்னை தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுமுறையில் பெங்களூருவில் உள்ள பெரியம்மா வீட்டுக்கு சென்றிருந்த அவர், நேற்று முன்தினம் ஆம்பூர்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜோலார்பேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.