வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் பெண் பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பெரிய கும்பேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா. திருமணமாகி மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், கணவர் ராஜசேகருடன் பெத்த வேப்பம்பட்டு திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பும்போது, வாணியம்பாடி அருகே வலையாம்பட்டு பகுதியில் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த நிவேதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி