ஆம்பூர் அருகே சாலை விபத்தில் பெண் பலி

ஆம்பூர் பகுதியை சேர்ந்த செல்வி (34) என்பவர், ஆம்பூரில் இருந்து கீழ்முருங்கைக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 7) உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி