ஆம்பூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நேற்று (மே 17) பார்சனா பள்ளி ஊராட்சி, குப்புராஜபாளையம் பகுதியில் யானைகள் கூட்டம் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. தகவலின் பேரில் ஆம்பூர் வனசரக அலுவலர் பாபு மற்றும் வாணியம்பாடி வன சரக அலுவலர் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி