திருப்பத்தூர்: சொத்து பிரச்சனை காரணமாக மாமன் சரமாரி வெட்டி படுகொலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் திம்மராயன்(48) ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தன்னுடைய மாமனை மச்சானாகிய சக்கரவர்த்தி வாழைத்தோப்பில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பி ஓடினார். 

இந்த படுகொலை சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் ஜோலார்பேட்டை காவல் துறை தற்போது வரை தப்பி ஓடி தலை மறைவாக உள்ள சக்கரவர்த்தியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடாமல் மெத்தனம் காட்டுவதாகவும் திம்மராயனின் மகனுக்கும் கொலை மிரட்டல் வருவதால் அவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கோரிக்கையை வலியுறுத்தியும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் எதிரே திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் அமர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி