வேலூர்: போலி சான்றிதழ் கொடுத்து பணி.. அஞ்சல் ஊழியர் கைது

வேலூரில், போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து 17 ஆண்டுகளாக அஞ்சல் துறையில் பணிபுரிந்த பாபு (55) என்ற ஊழியரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 2009-ல் பத்தாம் வகுப்பில் 241 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், அதை 341 என மாற்றி சான்றிதழ் சமர்ப்பித்து கிராம தபால் ஊழியர் பணிக்கு சேர்ந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி