பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவனகிரி கிராமத்தைச் சேர்ந்த கலைவாணி (64) என்பவர் தனது பெட்டிக் கடையில் விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து போலீசார் 20 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் கலைவாணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.