வேலூர் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் சுற்றுப்புறங்கள், மைதானங்கள், வகுப்பறைகள், கழிவறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார். பள்ளி கட்டிடங்களின் மேற்புறத்தில் மழைநீர் தேங்கி இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.