வேலூர்: விஜய்க்கு நினைவு பரிசு வழங்கிய நிர்வாகிகள்!

வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், கழகத் தலைவர் விஜய்க்கு நினைவுப் பரிசாக 'வேல்' மற்றும் 'மயில் மாலை' அணிவித்து சிறப்பித்தார். வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் கண்ணன், வெள்ளியால் செய்யப்பட்ட 'இரட்டை போர் யானை' மற்றும் 'வேலூர் தங்ககோவில் வடிவ உருவத்தை' நினைவுப் பரிசாக வழங்கினார். இவர்களுடன் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் நவீன், தொண்டரணி அமைப்பாளர் இம்தியாஸ், அணைக்கட்டு பகுதி செயலாளர் தனசேகர் ஆகியோரும் தலைவருக்கு 'செங்கோல்' வழங்கினர். தலைவர் விஜய், நிர்வாகிகளின் ஏற்பாடுகளைப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி