வாணியம்பாடி: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலியான இளம்பெண்..

வாணியம்பாடியில் இருந்து மேல்மருவத்தூர் கோயிலுக்கு, தனியார் பேருந்தில் பக்தர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, ஆற்காடு அருகே உள்ள முப்பது வெட்டி பகுதியில், டீ அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. தாழ்வாக சென்ற மின்கம்பி பேருந்து மீது உரசியதால், பேருந்தின் உள்ளே மின்சாரம் பாய்ந்தது. இதில், அகல்யா என்ற 20 வயது பெண் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி