திருப்பத்தூர்: அவலம்.. சிறுவர்களை துரத்தும் தெரு நாய்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டுகொல்லை பகுதியில் இரண்டு சிறுவர்கள் பள்ளி முடித்து விட்டு மோட்டுகொல்லை 1வது தெரு வழியாக வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு கூட்டமாக இருந்த தெரு நாய்கள் சிறுவர்களை துரத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மேலும் அவ்வழியாக வந்த பொதுமக்கள் சிலர் அந்த நாய்களை விரட்டியடித்ததால் இரண்டு சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக நாய்களின் தாக்குதலில் இருந்து தப்பித்துள்ளனர். 

மேலும் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் மூலமாகவும், வார்டு கவுன்சிலர்கள் மூலமாகவும், நேரில் ஆணையர் மற்றும் நகரமன்ற தலைவரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி