மேலும் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பதும் அடிக்கடி இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அதே பகுதியில் இருக்கும் இரும்பு கடையில் விற்று வருவதாகவும், இது குறித்து ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் அவர் மீது பல திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், அவரை காவல்துறையினர் பலமுறை எச்சரித்து அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெங்கடேசன் குடோனில் இறங்கி சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் உதிரி பாகங்களை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.