ராணிப்பேட்டை சோளிங்கர் அருகே பாமக இளைஞரணி தலைவர் சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் சடலமாக கிடந்ததை கண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.