திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சேவைகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தமிழக அரசு வழங்கும் மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி இன்று ஒரு நாள் அடையாளப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.