ஆஞ்சநேயர் கோயில் முன்பு சூரை தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் முன்பு திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் அனுப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு சூரை தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியை சேர்ந்த மாவட்ட செயலாளர் நக்கீரன் தலைமை தாங்கினார். பிரேம்குமார் மாதனூர் ஒன்றிய தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் ஆஞ்சநேயர் ஆலயம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி