ஆம்பூரில் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும் நான்கு சட்ட தொகுப்பினை திரும்ப பெறக் கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஹசேன், சக்கரவர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார். ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவர் தேவதாஸ், சிஐடியூ மாவட்டத் துணைத் தலைவர் அருள் சீனிவாசன் ஆகியோர் மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து கோஷங்கள் எழுப்பி சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி, ஐஎன்டியூசி, ஹெச்எம்எஸ், எல்பிஎஃப், சிஐடியூ உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி