ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சர்ஜீத்(23) என்ற வீரரின் இருப்பிட சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகும் ஆண், பெண் வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.