ஆம்பூரில் அடகு கடை உரிமையாளருக்கு அரிவாளால் சரமாரி வெட்டு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், மாரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் அருண் (35) இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆம்பூர் நகைக்கடை பஜாரில் சௌடாம்பிகா என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வரும் நிலையில் நேற்று (மார்ச் 26) இரவு கடையை மூடிவிட்டு தனது நண்பருடன் தனித்தனியே இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றபோது சோலூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அருணை மடக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

அப்போது ரத்த வெள்ளத்தில் கூச்சலிட்ட அருண், முன்னால் சென்று கொண்டிருந்த அவரது நண்பர் திரும்பி வந்து கூச்சலிட்டபோது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதில் கழுத்துப் பகுதியில் வெட்டு காயங்களுடன் படுகாயமடைந்த அருண் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி