ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 3 மாத கால ஒப்பனை மற்றும் அழகு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட, 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.