நாட்டறம்பள்ளி கூலித்தொழிலாளி திருநாவுக்கரசு (27),தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரளித்த பின்னர், காவல் நிலையத்திற்கு வெளியே பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அவரை, போலீஸார் தண்ணீரை ஊற்றி தடுத்தனர். அவர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி செய்த திருநாவுக்கரசு மீது, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர்.