காட்பாடியில் வீட்டிற்குள் நுழைந்து நகை செல்போன் திருடிய நபர்

வேலூர் மாவட்டம் காட்பாடி குமரப்பாநகரில், (09.11.2025) காலை 7 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆதரவற்றோர் போல் நடித்து வீட்டில் நுழைந்து, 2000 ரூபாய் பணம், ஒரு சவரன் கம்மல், மற்றும் ஒரு செல்போன் அடங்கிய ஹேண்ட் பேக்கை திருடிச் சென்றார். வயதானவர் கேட்டபோது, ஆதரவற்றோர் உதவி கேட்க வந்ததாகக் கூறிவிட்டு தப்பிச் சென்றார். போலீஸைக் கண்டதும் மர்ம நபர் வேகமாக ஓடினார். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி