திருப்பத்தூர் அருகே கத்தி முனையில் வெள்ளி நகைகள் கொள்ளை

ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி தீபக், விற்பனைக்காக 15 கிலோ வெள்ளி நகைகளை காரில் கொண்டு சென்றார். அம்பூர்பேட்டை பகுதியில் மர்ம நபர்கள் காரை வழிமறித்து, கத்தி முனையில் மிரட்டி சுமார் ₹39 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட வியாபாரி அளித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி