அப்போது அங்கு வந்த மணிகண்டன் எதிர்பாராத நேரத்தில் ஆசிட் கலந்த பெட்ரோலை ராஜேஷ் மீது ஊற்றி தீ வைத்தார். இதைத்தொடர்ந்து ராஜேஷ் உடல் முழுவதும் தீ பற்றி எரிய தொடங்கியது. உடனே மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடினார். அங்கிருந்த பொதுமக்கள் ராஜேஷ் உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக ராஜேசை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்