வாணியம்பாடி: தொடர் மின்வெட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி கிராமத்தில் தொடர்ந்து மின்சார துறையினர் வஞ்சிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஒரு பகுதிக்கு மின்சாரம் மற்றொரு பகுதிக்கு மின்தடை என்ற முறையில் தொடர்ந்து வஞ்சிக்கும் நோக்கத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டு இருந்தாலும் கூட இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மின்சார துறை அதிகாரிகள் அலட்சியப் போக்காகவே செயல்பட்டு வருகின்றனர். இதனால் படிக்கக்கூடிய மாணவர்கள் முதல் அன்றாடம் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் இல்லையெனில் வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை தரும்போது கொடையாஞ்சி கிராம மக்கள் சார்பில் இதற்கு தீர்வு காணும் வகையில் அதற்கான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே தீப்பந்தங்களை ஏந்தி போராட்டங்களும் அரங்கேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி