கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன், தனது குடும்பத்துடன் சென்னை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தபோது, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பிரவீன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆம்பூர் நகர காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.