அரக்கோணம் நகராட்சியின் நகர் மன்ற அவசரக் கூட்டம் டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில் நகராட்சி தலைவர் லட்சுமி, துணைத் தலைவர் கலாவதி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். திமுக நகர்மன்ற குழு தலைவரும் கவுன்சிலருமான துரை சீனிவாசன், ஆணையாளர் மற்றும் பொறியாளர் இல்லாமல் கூட்டம் நடத்தக்கூடாது என்றும், அப்படி நடத்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.