திருப்பத்தூர்: குக்கர் வெடித்ததில் முதியவர் படுகாயம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட ஏ-கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர் இவர் தனது மனைவியுடன் வசித்து வரும் நிலையில் இன்று (ஜனவரி 17) காலை தனது வீட்டில் சமையல் செய்துகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்து சிதறியுள்ளது. 

அப்போது அங்கிருந்த குணசேகரின் மீது குக்கர் மூடி விழுந்ததில் குணசேகரின் வாய் மற்றும் தாடைப் பகுதி கிழிந்துள்ளது. படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 பின்னர் மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகரக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சமையல் செய்துகொண்டிருந்த போது, குக்கர் வெடித்து முதியவர் வாய் மற்றும் தாடை கிழிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி