திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்த நிலையில் இன்று காலை 11:30 மணியளவில் பாஜக மாதனூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஜெயபாரதி தலைமையில் அக்கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் மாவட்ட மகளிர் அணி செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான பாரதிஸ்ரீ மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீங்கள் வெளியூர் ஆட்கள் இங்கு வந்து மாலை அணிவிக்க கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினரிடையே சில மணி நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த உமராபாத் காவல் துறையினர் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி சில மணி நேரத்திற்கு பின்னர் பாஜகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.