ஆம்பூர் அருகே கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது ஜீவன், ஈரோட்டில் உள்ள ஜே.கே.எம். தனியார் நர்சிங் கல்லூரியில் மருந்தகம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உமராபாத் போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி