திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் காவல்துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டு இருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவனை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் சிறுவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவன் பெயர் முஜம்மில் (17) என்பதும், ஆம்பூர் மோட்டு கொள்ளை பகுதியை சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. மேலும் அவன் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடியது என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து அவனிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவரது கூட்டாளியான மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.