வேலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ ஓட்டுனர் கைது

வேலூர் மாநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சைன்ஷா வயது (38) அதே பகுதியைச் சேர்ந்த 10-வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் உறவினர்கள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் ஷைன்ஷா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி