கணேஷ் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட வெளி மாவட்ட காவல் துறையினர் குற்ற வழக்கு தொடர்பாக இவரை கைவிலங்கிட்டு கைது செய்து அழைத்துச் செல்ல முயன்ற போது, போலீசாரை தாக்கி கைவிலங்கை தனது ஆதரவாளர்கள் துணையுடன் வெல்டிங் மிஷின் மூலம் உடைத்து தப்பித்து ஓடி தலைமறைவான நபர்.
இந்நிலையில் இவர் பள்ளி மாணவ மாணவர்களிடையே பாடும் ஆபாச பாடல் கேளுங்கள். "மஜாவா இனிக்கிறேயே பஞ்சு மிட்டாயா? உன்னை பார்த்ததும் எனக்கு ஏறுது கிக்கு, நீதாண்டி மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு" இப்படி நீள்கிறது அந்த பாடல் வரிகள். இதை அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், கலந்து கொண்ட கல்வி அலுவலர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். இதனிடையே பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.