ஆம்பூர் அருகே லாரி மோதி வாலிபர் பலி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூரைச் சேர்ந்த ஜெயராஜ் பிரதீப் (19) என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், நேற்று (மே 29) அதிகாலை 4:30 மணியளவில் பைக்கில் சென்றபோது, குடியாத்தம் - உள்ளி ரோட்டில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆம்பூர் தாலுகா போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி