வேலூர் மாவட்டம் கலவை டி. புதூர் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஒரு கோழிப்பண்ணையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பண்ணை உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கலவை போலீசார் விசாரித்து வருகின்றனர்.