ராணிப்பேட்டை மாவட்டம் மாகாணிப்பட்டு மேட்டு தெருவைச் சேர்ந்த வினோத்தின் மூன்று வயது மகன் ஷியாம், இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலூன் விழுங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்தான். வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.