பேரணாம்பட்டு: மதுபாட்டில்களை விற்க முயன்ற 6 பேர் கைது

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வீ. கோட்டா ரோடு, அரவட்லா சந்திப்பு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆசீர்வாதம் (வயது 40) என்பவர், கர்நாடகா மாநிலத்தின் 300 மதுபாக்கெட்டுகளை, பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (44), இவரது மனைவி சங்கீதா (38) ஆகியோரிடம் விற்பனைக்கு பிரித்து கொடுத்த போது போலீசார் மடக்கி பிடித்து 3 பேரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிளுடன், 300 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

அதேபோன்று கோட்டைசேரி கிராமத்தை சேர்ந்த மைக்கேல் (36) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து கர்நாடகா மாநிலத்தின் 50 மது பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். மாரி (40) என்பவர் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த கர்நாடகா மாநிலத்தின் 50 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும் அரவட்லா ரோட்டில் வல்லத்தரசன் (51) என்பவருடைய பெட்டி கடையில் 15 டாஸ்மாக் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி