ஆம்பூரில் வெறி நாய் கடித்து 6 சிறுவர்கள் படுகாயம்

ஆம்பூரில் வெறி நாய் கடித்து 6 சிறுவர்கள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர பகுதிக்குட்பட்ட புதுமனை, பிலால் நகர், தார்வழி உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்க்கள் 6 சிறுவர்களை கடித்துள்ளது.

இதில் படுகாயமடைந்த புதுமனை, பிலால் நகர், தார்வழி ஆகிய பகுதிகளை சேர்ந்த முஹம்மத் அரஃபத்(7), குருபரன். (10), மோஹித்(3), சரண்(7). கிஷோர்(5) ஆகில் (4)ஆகிய ஆறு சிறுவர்களை வெறி நாய் கடித்ததில் வயிறு, தலை, நெஞ்சு, கை போன்ற பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த சிறுவர்களை பகுதி மக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி