திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று (மார்ச். 3) ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய சோதனையில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பொது பெட்டியில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக, ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கஞ்சா கடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.