ஆம்பூர் அருகே 3 வயது குழந்தை உயிரிழப்பு

ஆம்பூர் அடுத்த மாதகடுப்பு பகுதியைச் சேர்ந்த சுதீஷ் - ஸ்ரேயா தம்பதியின் இரு பெண் குழந்தைகளும், நாய்க்கு வைக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்டதால் மயங்கி விழுந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 3 வயதான மூத்த பெண் குழந்தை உயிரிழந்தது. மே 10-ஆம் தேதி சமைத்த கோழி இறைச்சி குழம்பை மே 12-ஆம் தேதி நாய்க்கு வைத்ததாகவும், அதனை தெரியாமல் குழந்தைகள் சாப்பிட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி