வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் பகுதியில் மே 16 அன்று டவுன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, விஜய் (28) என்பவர் செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரைத் தொடர்ந்து, அவருடன் இருந்த பிரதீப் குமார் (24) மற்றும் பிரவீன் குமார் (27) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 8 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.