பழனி கோயில் நில மோசடி வழக்கில் நிலத்தை வாங்கியவர்களில் ஒருவரான வெள்ளத்துரையின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனால் இவ்வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:NewsTamil