2026-ம் ஆண்டிற்கான 'வாகன உரிமையாளர் நிலை எளிமை குறியீட்டை' மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணையமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா வெளியிட்டுள்ளார். IndiaTech.org மற்றும் Consumer VOICE அமைப்புகளால் 15 மாநிலங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட இந்தக் குறியீட்டில், ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தையும், அதனை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன; உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.