இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு வாரியம் வாகன காப்பீட்டை 4 பிரிவுகளாக பிரித்து வரும் டிச.15 முதல் அமலுக்கு வரும் வகையில் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் சொந்த வாகன சேத காப்பீடு, பயணிகளுக்கான தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவை இனி கட்டாயமில்லை என்றும், அது வாகன உரிமையாளர்களின் விருப்ப தேர்வாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய மற்றும் பழைய வாகனங்களின் காப்பீட்டை புதுப்பிக்கும் போது பிரீமியம் தொகையை தனித்தனியாக காட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.