சோப்புகள், ஷாம்புகள், பற்பசைகள், அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட தனிநபர் பராமரிப்புப் பொருட்களில், அவை சைவமா அல்லது அசைவமா என்பதை நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில் மத்திய அரசு புதிய பேக்கேஜிங் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதிகளின்படி, சைவப் பொருட்களில் பச்சை நிறப் புள்ளியும், அசைவப் பொருட்களில் சிவப்பு அல்லது பழுப்பு நிறப் புள்ளியும் இடம்பெற வேண்டும்.