வரத்து அதிகரிப்பு காரணமாக காய்கறிகளின் விலை மளமளவென குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், ஈரோடு உள்ளிட்ட சந்தைகளில் காய்கறிகளின் விலை சரிவை சந்தித்துள்ளது. ரூ.50-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் ரூ.38-க்கும், தக்காளி ரூ.10, உருளைக்கிழங்கு மற்றும் கேரட் ரூ.25, ஒரு கிலோ பீன்ஸ், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், குடை மிளகாய் ஆகியவை தலா ரூ.30க்கும் விற்பனையாகின்றன.