ஒட்டுமொத்த தெருவையே விலை பேசும் தேர்தல்.. வீரபாண்டியன் கண்டனம்

தனிநபர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தாண்டி, இந்தத் தேர்தலில் அமைச்சர்கள் களமிறங்கி ஒட்டுமொத்த தெருவையே விலைபேசுவதாக சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வாக்குக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படுவதாகவும், இதற்குப் பொதுமக்களின் போன்பே, ஜிபே செயலிகளே சாட்சி என்றும் கூறினார். செல்போன்களைப் பார்த்தாலே உண்மை தெரியும் எனத் தேர்தல் முறைகேட்டைச் சாடியுள்ளார். ஜனநாயகத்தைச் சீரழிக்கும் இச்செயல் மீது நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕