விமான எரிபொருளுக்கான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. முன்பு 29 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 16 சதவீதமாக வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் அக்., 31ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பயணக் கட்டணத்தை குறைக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நன்றி: News18