இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக 2026 ஆசிய விளையாட்டு போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியின் போது பந்துவீசியபோது அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அதிலிருந்து அவர் முழுமையாகக் குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்குப் பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர் விப்ராஜ் நிகாம் இந்திய ஆசிய விளையாட்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.