வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம்: வடகலை-தென்கலை கைகலப்பு

உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்கிய நிலையில், வழக்கம் போல வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையே பிரபந்தம் பாடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் கோயிலில் பரபரப்பு நீடித்தது.

நன்றி:தந்தி

தொடர்புடைய செய்தி